நோர்வேயில் கொரோனா : Trondheim நகராட்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு கொரோனா!

You are currently viewing நோர்வேயில் கொரோனா : Trondheim நகராட்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு கொரோனா!

கடந்த நான்கு நாட்களில், Trondheim நகராட்சியில் வசிக்கும் 23 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களில் எட்டுப் பேர் இளைஞர்கள் என்றும், அவர்களில் ஒருவர் Trondheim நகராட்சியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் என்றும் Adressa பத்திரிகை தெரிவித்துள்ளது.

Skjetlein” உயர்நிலைப்பள்ளியின் முதல்வர் “Helen Pedersen“, பள்ளியில் ஒரு மாணவருக்கு தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளார், மாணவருக்கு வார இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் இப்பொழுது தனிமையில் உள்ளார். Trondheim நகராட்சி, தொற்று கண்டறிதலை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த நபர் வேறு ஒரு மாணவர் மற்றும் சில ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மற்றைய மாணவரும் இப்பொழுது தனிமைப்படுத்தலில் உள்ளனர், இதன் விளைவாக ஏழு ஊழியர்களும் தனிமைப்படுத்தலில் உள்ளனர், என “PedersenAdressa பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள