நோர்வேயில் தமிழீழத்தின் தூணாக செயற்பட்ட அமரர் சிவராஜா!!

நோர்வேயில்  தமிழீழத்தின் தூணாக செயற்பட்ட அமரர் சிவராஜா!!

கணபதிப்பிள்ளை சிவராஜா செப்டம்பர் 6, 1944 அன்று இலங்கையில் பிறந்தார். அங்கு அவர் தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் கழித்தார். அங்கு உள்ள ஒரு மீன்பிடி பள்ளியில் பட்டம் பெற்ற பின்பு , அவர் தனது சொந்த மீன்பிடிக் கப்பலில் முதலீடு செய்து, சுறுசுறுப்பான மீனவராகத் வலம்வந்தார்.  இந்த செயற்பாடு தொடர்பாக, அவர் 1968 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள தோப்புக்காட்டில் உள்ள Cey-Nor Development Foundation ஐ தொடர்பு கொண்டார். 

இந்த அமைப்பு சீ-நோர் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இவ்வமைப்பானது 1960 களின் நடுப்பகுதியில் நோர்வே இளைஞர் சங்கத்தால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டுவந்துள்ளது. 

இந்த திட்டத்தின் தலைவராக நோர்வேயின் அரசியல்வாதியான Arne Fjørtoft அவர்கள் இருந்து வந்தார், இதில் மீன்பிடி படகுகள், உறைவிப்பான், நூல் தொழிற்சாலைகள், ஒரு சுகாதார மையம் மற்றும் கிராம மேம்பாடு ஆகியவை அடங்கும். 

கணபதிபிள்ளை சிவராஜா அவர்களுக்கு 1968 ஆம் ஆண்டில் Cey-Nor Development Foundation இல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது, அடுத்த ஆண்டு அவருக்கு ஜப்பானில் மீன்வளத்தைப் படிப்பதற்கான உதவித்தொகை வழங்கப்பட்டது.  அவரது உதவித்தொகை காலம் முடிந்ததும், அவர் இலங்கைக்கு திரும்பினார்.  இருப்பினும், 1972 ஆம் ஆண்டில், Hammerfest இல் உள்ள ஃபைண்டஸ் என்ற உணவு நிறுவனத்தில் அவருக்கு வேலை வழங்கப்பட்டு அங்கு சென்றார்.

Hammerfest இல் இருந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிவராஜா அவர்கள் 1980 ஆம் ஆண்டில் Tromsø விற்கு பயணம் செய்தார், Tromsø பல்கலைக்கழகத்தில் மீன்வளத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

தனது படிப்பின் போது (1980-86) உள்ளூர் அரசியலிலும் ஈடுபட்டார்.  சிவப்பு தேர்தல் கூட்டணியில் Tromsø வில் உள்ள நகராட்சி மன்றத்தில் பணிபுரிந்து வந்தார் அதே கட்சிக்காக நகராட்சியில் பணியாற்றியும் உள்ளார், குறிப்பாக உள்ளூர் மற்றும் பிராந்திய மட்டத்தில் ஒருங்கிணைப்புக் கொள்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

1993 முதல் புலம்பெயர்ந்தோர் மற்றும் நோர்வே அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புக் குழுவின் துணை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதனால் தேசிய அளவில் தனது ஈடுபாட்டைத் தொடர வாய்ப்பு கிடைத்தது.  சிவராஜா அவர்கள் 1997 வரை தொடர்பு குழுவில் உறுப்பினராக இருந்தார்.

நோர்வேயின் அரசியல் பணிகளுக்கு இணையாக, கனபதிப்பிள்ளை சிவராஜா அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.  குறிப்பாக, யாழ்ப்பாண பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்றார்,

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீன்வள ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார் தாயகத்தின் அதீத காதல் கொண்ட இவர் அயராது தனது அறிவியல் பணியினோடு பலம் சேர்த்துவந்துள்ளார்.

திரு. கணபதிப்பிள்ளை சிவராஜா இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்துள்ளார். 

அவர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் ஒரு பகுதியாக செயற்பட்டு வந்தார். 

திரு சிவராஜா அவர்கள் தனது வாழ்க்கையில் பல முக்கிய பாத்திரங்களையும் பணி நிலைகளையும் வகித்துள்ளார் மற்றும் தமிழர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காக அவரது மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டார்,

அவற்றில் முக்கியமாக விடுதலைப் புலிகளின் மீன்வளத்துறை ஆலோசகராகவும் நோர்வேயிலுள்ள Tromsø மீன்வளத்துறையின் முன்னாள் இயக்குநராகவும் இருந்துவந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கடந்த ஆண்டின்(06.12.2020) முடிவில் பின்லாந்தில் கண்மூடிவிட்டார் என்ற செய்தி இப்போதுதான் எமக்கு கிடைத்துள்ளது.

1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments