நோர்வேயில் தேசியரீதியாக நடாத்தப்படும் பாடல்போட்டியில் ஈழத்தமிழன்!

நோர்வேயில் தேசியரீதியாக நடாத்தப்படும் பாடல்போட்டியில் ஈழத்தமிழன்!

நோர்வே தெலைக்காட்சியான தெலைக்காட்சி2(TV2) நடாத்திவருகின்ற மிகப்பிரபல்யமான Idol பாட்டுப்போட்டியில் போட்டிபோட்டு சிறப்பாக பாடிவரும் ஈழத்தமிழரான அனிஸ்ரன் மரியாம்பிள்ளை அவர்கள் இப்பொழுது வாக்கெடுப்பு நிலைக்கு உயர்ந்துள்ள நிலையில் நோர்வே வாழ் மக்கள் எமது ஈழத்தமிழரான அனிஸ்ரனை முன்நகர்த்த அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும்.

பணம்கட்டி வாக்களிப்பதற்கு குறும்தகவலிற்கான இலக்கம்(sms 5 til 26700 -5kr )மற்றும் தொலைபேசி இலக்கம்(82949205-5kr) அல்லது இலவசமாக வாக்களிக்க (tv2.no) .

இதேவேளை ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் 8 மணிக்கு நடைபெறும் நிகழ்சியில் நேரடியாகவும் வாக்களிக்கலாம்.

உங்கள் ஒரு வாக்கு இறுதிப்போட்டியில் அனிஸ்ரனை வெற்றியாளர் ஆக்கும் ஆகவே ஒரு வாக்கையும் விரையம் செய்யாது ஈழத்தமிழனை வெற்றிபெற செய்வோம்.

அனிஸ்ரன் அவர்கள் தமிழ்முரசம் நடாத்திவரும் செல்லக்குயில் பாடல்போட்டியில் பங்கெடுத்து தமிழ்முரசத்தாலும் நேயர்களாலும் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அத்தோடு தமிழ்முரசத்தால் கடந்த ஆண்டு 10 ஆண்டு இனவழிப்பு நினைவாக வெளியிடப்பட்ட உயிர்வலி இறுவட்டில் ஒரு பாடலைப்பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த