இன்று(18.10.2025) நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவும் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளும் மண்டபம் நிறைந்த மக்களோடு எழுச்சியோடு நடைபெற்றது.


இந்நிகழ்வானது தமிழீழத்தேசியக்கொடி ஏற்றலுடன் சுடர் வணக்கம் ஏற்றப்பட்டு மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.


இந்நிகழ்வில் நினைவுரைகள் நடனங்கள் நாடகம் மற்றும் தமிழ் மகளிர் அமைப்பினால் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது அத்தோடு தமிழ் மகளிர் அமைப்புக்காக தாயகம் நோக்கிய செயற்பாட்டுக்கு உண்டியல் சேர்த்து பணத்தினை வழங்கிய சிறுவர் சிறுமிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.


இவற்றோடு நோர்வே தமிழ் மகளிர் அமைப்பின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு துருவ மங்கை நூல் வெளியீடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் அணியின் 40 வது ஆண்டு நினைவினைத் தாங்கி சூரியப்புதல்விகள் இறுவட்டும் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.










