நோர்வேயில் மிகவும் வயதான நபர் இறந்துள்ளார்!

நோர்வேயில் மிகவும் வயதான நபர் இறந்துள்ளார்!

நேற்று (16.02) ஞாயிறு வரை நோர்வேயின் மிகவும் வயதான நபராக அறியப்பட்ட , Helgeland ஐ சேர்ந்த 110 வயதான மேரி அன்டோனெட் ஆண்டர்சன் (Marie Antonette Andersen) அவர்கள் ஞாயிறு இரவு இறந்துள்ளார்.

இதை அவரது குடும்பத்தினர் Brønnøysunds Avis க்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29. அன்று ஆண்டர்சன் தனது 110 வயதை எட்டியிருந்தார், இது வயோதிபர் பராமரிப்பு மையமான “sykehjemmet i Leirfjord” மருத்துவமனையில் 30 குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடப்பட்டது.

ஆண்டர்சன் 1909 இல் ஹெல்ஜ்லேண்டில்(Helgeland) உள்ள நெஸ்னா(Nesna) நகராட்சியில் உள்ள டோம்மா(Tomma) என்ற இடத்தில் பிறந்தார்.

மேலதிக விபரங்களுக்கு:- NRK

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த