நோர்வேயில் முஸ்லீம்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்!!

நோர்வேயில் முஸ்லீம்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்!!

ஸ்வீடனில் தொடங்கிய வன்முறை தீ இப்போது அண்டை நாடான நோர்வேக்கும் பரவியுள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோ மற்றும் பேர்கன் நகரங்களில் கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் சியாங் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் நகல்களை எதிர்ப்பாளர்கள் கிழித்து எறிந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து நோர்வே தேசிய தொலைக்காட்சியான NRK வில் நடந்த விவாதத்திற்கு பிற்பாடு ஆத்திரமடைந்த  இஸ்லாமிய ஆதரவாளர்கள் வன்முறை போராட்டங்களில் இறங்கினர்.

இது தொடர்பாக பல போராட்டக்காரர்களை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அன்றும் ஸ்வீடனில் வன்முறை கலவரம் வெடித்தது. அத்தோடு அயல்நாடுகளான டென்மார , நோர்வே நாடுகளுக்கும் கலவரம் பரவியுள்ளது

ஐரோப்பில் அமைதி பூங்காவாக திகழும் நாடுகளில் ஒன்று ஸ்வீடன். அங்கே வெள்ளிக்கிழமை குரான் அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்ததில் இருந்து கலவரம் வெடித்தது. ஏராளமான மக்கள் மால்மோ நகரின் வீதிகளில் இறங்கி காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இந்த நேரத்தில், போராட்டக்காரர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்கும் தீ வைத்தனர். காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முயன்றனர். சிலரை கைது செய்துள்ளனர்.

நோர்வேயிலும் இதேபோன்ற நிலையே போராட்டங்களில் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments