நோர்வேயில், மேலும் ஐந்து புதிய கொரோனா மரணங்கள்!

நோர்வேயில், மேலும் ஐந்து புதிய கொரோனா மரணங்கள்!

பெர்கனில் உள்ள கிறிஸ்தவ பராமரிப்பு இல்லத்தில் இரண்டு புதிய கொரோனா இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக பெர்கன் நகராட்சி தனது செய்திக்குறிப்பில் எழுதியுள்ளது.

இதே பராமரிப்பு இல்லத்தில் கடந்த காலத்தில் கொரோனா தோற்றால் 16 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிறிஸ்தவ பராமரிப்பு இல்லத்தில் வசித்துவந்த, Fyllingsdalen மருத்துவ இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட மேலும் இருவர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், மே 7 வியாழக்கிழமை “Nordseter” பராமரிப்பு இல்லத்தைச் (Nordseterhjemmet) சேர்ந்த ஒருவர் கொரோனா தோற்றால் இறந்துள்ளார் என்று ஒஸ்லோ மாநில உள்துறை அலுவலகம் இன்று திங்கள் செய்திக்குறிப்பில் எழுதியுள்ளது.

குறித்த நபர், முன்பு கோவிட் -19 சோதனைகளில் பலமுறை எதிர்மறையான பதிலையே பெற்றிருந்தார். இருப்பினும், குறித்த நபருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் அவர் பாதிக்கப்பட்டவராகவே கருதப்பட்டார். குறித்த நபரின் மரணத்திற்குப் பின்பு எடுக்கப்படட ஒரு புதிய சோதனையில், அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று பராமரிப்பு இல்ல அமைச்சு தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments