நோர்வேயில் விபத்தொன்றில் 5பேர் மரணம்!

You are currently viewing நோர்வேயில் விபத்தொன்றில் 5பேர் மரணம்!

நடைபெற்ற இந்த விபத்தில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர், அவர்களில் ஐந்து பேர் இறந்ததாக நேற்று இரவு 04.38 மணிக்கு துரோம்சோ காவல் மாவட்ட செயல்பாட்டு மேலாளர் ரூன் நில்சன் தெரிவித்தார்.

 ஒவ்வொரு மகிழுந்திலும் மூன்று பேர் இருந்தனர். 18 வயதுடைய மூன்று ஆண்கள் ஒரே மகிழுந்தில் இருந்தனர்.

50 மற்றும் 60 வயதுடைய ஒரு ஆணும் இரண்டு பெண்களும் மற்றொரு மகிழுந்தில் இருந்தனர்.

50 வயதுடைய பெண்களில் ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக  காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு நள்ளிரவுக்கு சற்று முன்பு துரோம்சோவிலிருந்து தெற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் E8 இல் இந்த விபத்து நிகழ்ந்தது.

சனிக்கிழமை மாலை 23.44 மணிக்கு விபத்து குறித்த தகவல்  காவற்துறைக்கு கிடைத்துள்ளதாக காவற்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply