நோர்வேயில் 2ம் லெப்ரினன் மாலதி நினைவு!

You are currently viewing நோர்வேயில் 2ம் லெப்ரினன் மாலதி நினைவு!

இந்திய அமைதிப்படை தாயகத்தில் ஊடுருவிய காலக்கட்டத்தில் மாலதி தனது சக தோழிகளுடன் கோப்பாய் கிறேசற்சந்தியில் ஊர்திகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத் தருணத்தில் தான் இந்திய இராணுவத்தினருடனான மோதல் ஆரம்பித்தது. இராணுவத்தினருக்கு மிகவும் அண்மையில் நின்று போர் நடாத்திய மாலதி விழுப்புண்ணடைந்த நிலையிலும் தொடர்ந்து களமாடிய மாலதி, தான் உயிருக்கு மேலாக நேசித்த ஆயுதம் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” என தனது தோழியிடம் ஆயுதத்தை கையளித்துவிட்டு கழுத்தில் தொங்கிய சயனைட்டை அருந்தி 10/10/1987 அன்று வீரகாவியம் படைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரவரலாறாகிய முதற் பெண் மாவீரரே 2ம் லெப். மாலதி ஆவார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply