நோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்!

நோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்!

நோர்வேயில் சாஸ்போர்க் எனும் இடத்தில் தொடர் கத்திக்குத்து செவ்வாய் இரவு தொடக்கம் புதன் வரை நடைபெற்றுள்ளது இந்த சம்பவத்தில் 3 பெண்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தசம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை காவல்த்துறையினர் கைதுசெய்துள்ளனர் அதேவேளையில் இச்சம்பவத்தில் பலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்த்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினருக்கு பக்க பலமாக உலங்கு வானூர்தியும் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

மூன்று வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இச்சம்பவத்தினை நேரடியாக கண்கண்ட சாட்சிகள் தெரிவிக்கையில் பெண்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடியதாகவும் அங்கு பிரசன்னமாகிய காவல்த்துறையினர் எல்லோரையும் உள்ளே செல்லுமாறு பணித்ததாகவும் தெரிவிக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் தெரிவிக்கையில் தானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நேரம் கதவு தட்டப்பட்டதாகவும் யார் என்று பார்க்கும் பொழுது உள்ளே நுழைந்து தனது மனைவியை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments