நோர்வேயில் 70 நகராட்சிகளில் கொரோனா!

நோர்வேயில் 70 நகராட்சிகளில் கொரோனா!

கடந்த 24 மணிநேரத்தில் நோர்வேயில் 408 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது தலைநகர் ஒஸ்லோவில் 90 பேருக்கு தொற்றியுள்ளது ஒட்டுமொத்தமாக நோர்வேயில் இதுவரை 24,243 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார த்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை 70 நகராட்சிகளில் தொற்று அதிகரித்துள்ள நிலையில் 7 நகராட்சிகளில் தொற்று குறைந்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் நோர்வே முழுவதும் கடந்த வாரத்தில் 117,115 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அவர்களில் 2,6 வீதத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இப்போது வரை மருத்துவமனையில் 92 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் பலர் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறிவருவதால் காவல்த்துறை சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்த அதேவேளையில் துறம்சோவில் சட்டவிதிமுறைகளை மீறிய வெளிநாட்டு குடியுரிமை கொண்ட இருவருக்கு காவல்துறை தலா 20,000 குரோனர்களை அபராதம் விதித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments