நோர்வே : கடந்த 24 மணி நேரத்தில் 624 புதிய கொரோனா தொற்றுக்கள்!

நோர்வே : கடந்த 24 மணி நேரத்தில் 624 புதிய கொரோனா தொற்றுக்கள்!

நோர்வேயில், கடந்த 24 மணி நேரத்தில் 624 புதிய கொரோனா தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொற்று வெடிப்பு தொடங்கியதில் இருந்து நோர்வேயில் மொத்தம் 22,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NTB இன் கருத்துப்படி, ஒரு சோதனையின் பதில் தயாராக இருந்து, தொற்று நோய்களுக்கான தேசிய அறிக்கையிடல் அமைப்பில் (MSIS) பதிவு செய்யப்படும் வரை சராசரியாக ஒன்று முதல் இரண்டு நாட்கள் எடுக்கும். ஆகவே சமீபத்திய நாட்களின் புள்ளிவிவரங்களில், சமீபத்திய நாட்களின் தொற்று நிலைமை பற்றிய தகவல்களில் மாற்றங்கள் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றின் முதல் அலைகளின் போது இருந்ததை விட இப்போது கொரோனா வைரசுக்கு பரிசோதிக்கப்பட்ட மக்களின் அளவு (விழுக்காடு) அதிகமாக உள்ளது. கடந்த வாரம் 107,469 பேர் பரிசோதிக்கப்பட்டனர், சோதனைகளின் நேர்மறை முடிவுகள் 2.5 விழுக்காடாக இருந்துள்ளது.

நோர்வேயில் 72 நகராட்சிகளில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. Haugesund, Skien, Kongsberg மற்றும் Hammerfest ஆகியவற்றில் தொற்று பரவல் குறைந்து வருகின்றது.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments