கலாச்சார அமைச்சர் : அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் ஜூன் 15 வரை ரத்து!

கலாச்சார அமைச்சர் : அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் ஜூன் 15 வரை ரத்து!

ஜூன் 15 ஆம் திகதி வரை பொதுமக்களுடனான அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் ரத்து செய்யப்படும் என்று நோர்வே கலாச்சார அமைச்சர் Abid Q. Raja (V) இன்று செவ்வாய் அறிவித்துள்ளார்.

விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகளுக்கும் இந்த முடிவு பொருந்தும்!
எந்த ஒரு விளையாட்டு நிகழ்வோ அல்லது இசை நிகழ்ச்சிகளோ நடத்தப்படமாட்டாது என்றும் மேலும், கொரோன தொற்று பரவலை தடுக்க நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் Abid Q. Raja மேலும் கூறியுள்ளார்.

மே மாத தொடக்கத்தில் அரசாங்கம் ஒரு புதிய முடிவை அறிவிக்கவுள்ளது என்றும், இது கோடைகாலத்தின் மற்ற பகுதிகளுக்கு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கலாச்சார நிகழ்வுகள் குறித்து ஜூன் 15 ஆம் திகதியை கலாச்சார அமைச்சு தேர்வு செய்வதற்கான காரணம், இதுபோன்ற நிகழ்வுகளைத் திட்டமிடுவோருக்கு வசதியாக முன்னறிவிப்பை வழங்குவதாகும் என்று Abid Q. Raja மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும் மே மாத தொடக்கத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: TV2

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments