நோர்வே – டென்மார்க் ; பயனப் போக்குவரத்துகளை ஜூன் 15 முதல் திறக்கவுள்ளது!

நோர்வே – டென்மார்க் ; பயனப் போக்குவரத்துகளை ஜூன் 15 முதல் திறக்கவுள்ளது!

நோர்வே மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இடையிலான பயனப் போக்கு வரத்துகளை மீண்டும் திறக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் பொருள் நுழைவு தனிமைப்படுத்தல் மற்றும் நுழைவு கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. அதேவேளை, வெளியுறவு அமைச்சகத்தின் உலகளாவிய பயணக் குழுவிலிருந்து டென்மார்க்குக்கு சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் வடபிராந்தியமெங்கும், தனது பயணத்தடைகளை நீக்குவதற்கான பணிகளை நோர்வேயும் மேற்கொண்டு வருகின்றது என்று SMK ஒரு செய்திக்குறிப்பில் எழுதியுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை படிப்படியாகவும், கவனமாகவும் நீக்கும் பாதையில் இது முதல் படியாகும். அதே நேரம், நோர்வேயில் நோய்த்தொற்றின் அளவை குறைவாக வைத்திருப்பதன் அவசியத்தை சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் பிரதமர் Erna Solberg (H) கூறியுள்ளார்.

மேலும், நோர்வேயில் இருந்து சுற்றுலாப் பயணிகளை மீண்டும் உள்வாங்குவது தொடர்பாக, செய்தியாளர் சந்திப்பில் டென்மார்க் பிரதமர் Mette Fredriksen கூறுகையில், எல்லைகளிலும், விடுமுறை இடங்களிலும் கொரோனா தொற்று குறித்து டென்மார்க் தற்காலிக சோதனைகளை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

இந்த மாற்றங்கள் ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வரும்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments