நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன!

நோர்வே நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு பலியான 7 பேர்களது பெயர்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சதுப்பு / களிமண் பிரதேசத்தில் புதையுண்ட நிலையில் வீடுகளின் இடிபாடுகளுக்கிடையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 7 சடலங்களையும் பிரேத பரிசோதனைகளுக்கு உள்ளாக்கி, பூர்வாங்க விசாரணைகள் முடிவுற்ற பின்னரே அவை பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமென காவல்துறை முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இப்போது அறுவர் பெயர்கள் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளன.

Lisbeth Neraas (54) மற்றும் அவரது மகன் Marius Brustad (29)
Bjørn – Ivar Jansen (40), 8 மாத கர்ப்பிணியான Charlot Grymyr Jansen (31) மற்றும் இவர்களது மகள் Alma Grymyr Jansen (02)
Eirik Grønolen (31)
Irene Ruud Gundersen (69)

ஆகியோரே இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவார்கள். இன்னும் இரு சடலங்கள் அடையாளம் அடையாளம் காணப்பட வேண்டிய நிலையில், இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் மூவரது நிலை பற்றிய தகவல்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments