நோர்வே நிலச்சரிவு தேடுதலில் நாய் உயிருடன் மீட்பு!

நோர்வே நிலச்சரிவு தேடுதலில் நாய் உயிருடன் மீட்பு!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் என்பன புதையுண்ட நிலையில், 7 பேர் இடிபாடுகளுக்கும், புதைகுழிக்குள்ளும் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 3 பேரின் நிலை தெரியாமலேயே இருக்கிறது.

இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், நேற்று (04.01.2021) இடிபாடுகளுக்கிடையில் இருந்து நாய் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

காயங்கள் ஏதுமின்றி மீட்கப்பட்ட இந்நாயை, சோதனைகளுக்காக மிருகவைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்திருக்கும் காவல்துறை, காணாமல்போயுள்ள மூவரையுமாவது உயிரோடு மீட்கும் நம்பிக்கையில் மீட்ப்புப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments