நோர்வே மன்னர் தனிமைப்படுத்தலில்! ஜோர்தானுக்கான பயணத்தின்பின் நடவடிக்கை!!

நோர்வே மன்னர் தனிமைப்படுத்தலில்! ஜோர்தானுக்கான பயணத்தின்பின் நடவடிக்கை!!

நோர்வேயின் மன்னர் “Harald” அவர்கள் அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அரசுமுறைப்பயணமாக “ஜோர்தான்” சென்றுவந்த மன்னர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அரசாங்கம் மற்றும் அமைச்சர்களை காணொளி மூலம் மன்னர் வழிநடத்துவாரென அரசமாளிகை தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மன்னரின் நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக தெரிவித்திருக்கும் அரச மாளிகை, “கொரோனா” தொடர்பான அரசாங்கத்தின் பரிந்துரைகளை நாட்டு மக்கள் அனைவரும் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமெனவும் மன்னர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, நோர்வேயின் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பிரதான அமைச்சர்களும் தனிமையில் இருக்கும்படி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக பிந்திய தகவலொன்று தெரிவிக்கிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments