பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றோம்!!

பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றோம்!!

யாழ்பல்கலைகழகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இறந்தோர் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எமது பல்கலைகழகத்தில் இடம்பெற்ற இறந்தோர் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயம என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாங்கள் புரிந்துகொண்;டு;ள்ளோம் என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்கவேண்டும் என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்புரை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தர் பணிப்புரை விடுத்தவர்கள் நிலைமைமைய மேலும் மோசமாக்கியுள்ளனர் என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை திங்கட்கிழமை வடக்குகிழக்கு தழுவிய நிலையில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலிற்கு பூரண ஆதரவை வழங்குவதாக யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments