பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

You are currently viewing பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

முன்னாள் பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் நேற்று(17) டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி இதில் பலர் கொல்லப்பட்டனர்.

 

ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்து பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது.

பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதுடன் அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply