படகு விபத்து; 14 ரோஹிங்யா அகதிகள் பலி!

படகு விபத்து; 14 ரோஹிங்யா அகதிகள் பலி!

வங்காளதேசத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 14 ரோஹிங்யா அகதிகள் பலியாகி உள்ளனர்.

வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் அகதிகள் முகாம்களில் மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்யாக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  முகாம்களில் அதிக அளவில் அவர்கள் உள்ள நிலையில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதனால் சிலர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.  இந்நிலையில், மீன்பிடி படகுகளில் 130 பேர் வங்காள விரிகுடா கடல் பகுதி வழியே மலேசியாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதற்காக 2 படகுகளில் அவர்கள் கிளம்பி சென்றனர்.  கடத்தல்காரர்கள் சிலரது வசீகர பேச்சில் நம்பி சென்ற அவர்களின் படகுகளில் ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்தவர்கள் உயிர்காப்பு கவசம் இல்லாத சூழலில் மூழ்க தொடங்கினர்.  அவர்களில் 14 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  70 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  

ஆனால் மற்றொரு படகு என்னவானது என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.  தொடர்ந்து புனித மார்ட்டின் தீவு பகுதியருகே கடற்படை மற்றும் கடலோர காவல் படை படகுகள் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments