படப்பிடிப்பின்போது மயங்கி விழந்து இறந்த இளம் படப்பிடிப்பாளர் – சோகத்தின் குமுழமுனை கிராமம்

You are currently viewing படப்பிடிப்பின்போது மயங்கி விழந்து இறந்த இளம் படப்பிடிப்பாளர் – சோகத்தின் குமுழமுனை கிராமம்

முல்லைத்தீவு குமுழமுனையினை சேர்ந்த ஜெகதீஸ்வரன் கஜீவன் என்ற சிறந்த இளம் புகைப்படப்பிடிப்பாளர் நேற்று (15.11.21) திடீரொன படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் விபத்திற்கு உள்ளான நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கஜீவன் கிளினிக் சென்று சிகிச்சையினை பெற்று வந்திருந்தார்.

நேற்றும் கிளினிக் சென்று வந்த நிலையில்   படப்பிடிப்பு ஒன்றின் போது திடீரென மயங்கிவீழ்த அவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்ற போது உயிரிழந்திருக்கிறார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை என்ற கிராமத்தில் பிறந்து இயற்கையினை ரசித்து வாழ்ந்த இவரது வாலிப பருவம் புகைப்பட துறையினை ஈர்த்தது,

சிறு வயதிலும் சிறந்த புகைப்பட கலைஞனாக திகழ்ந்த இவர்  முல்லைத்தீவு குமுழமுனையில் தான் வாழ்ந்த இடத்தில் புகைப்பட கலையகத்தினை நிறுவி புகைப்பட கலைஞனாக வாழ்ந்துவந்த இவரின் சாவு இன்று கிராமத்தினையும் பல நண்பர்களையும் சோகத்தில் ஆழ்திவிட்டு சென்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments