படையினரால் பிடிக்கப்பட்ட 2 ஊடகவியலாளர்களை காணவில்லை!

You are currently viewing படையினரால் பிடிக்கப்பட்ட 2 ஊடகவியலாளர்களை காணவில்லை!

காலிமுகத்திடலில்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து செய்தியறிக்கையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ள அதேவேளை கைது செய்யப்பட்ட இரு பத்திரிகையாளர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.

கொள்ளுப்பிட்டி கிரஸ்காட் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சத்துரங்க பிரதீப் குமார, கசுன் குமாரகே இருவரையும் இன்னமும் படையினர் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை என செய்திகள் வெளியாகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெரைன் சாமுவேல், மணிகண்டன், ஊடகவியலாளர் ரசிக குணவர்த்தன மற்றும் சட்டத்தரணிகள் என பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments