படையினர் காவல்த்துறையினர் தடையினை மீறியும் செஞ்சோலை 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

படையினர் காவல்த்துறையினர் தடையினை மீறியும் செஞ்சோலை 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் காவல்த்துறையினர் அச்சுறுத்தலையும் மீறி உணர்வுபூர்வமாக நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
நினைவு நிகழ்வினை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு பொலீசாராலும் படையினராலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது அதொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்
தொடர்ந்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


ஆண்டு தோறும் நினைவேந்தல் இடம்பெறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவிற்கு அருகில் வளமையாக இடம்பெற்று வரும்நிலையில் குறித்த இடத்தில் நினைவேந்தல்  நடத்த பொலீசார் தடை விதித்திருந்தனர்.


இருந்தபோதிலும் காவல்த்துறை மற்றும் படையினரின் தடைகளையும் மீறி தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் அந்த இடத்திற்கு சென்றபோது காவல்த்துறையினர் குறித்த இடத்தில் நிகழ்வு செய்யவேண்டாம் என்றும் வேறு இடத்தில் அஞ்சலி செலுத்துமாறு சிவாஜிலிங்கத்திடம் அறிவித்துள்ளார்கள் இருந்தும்  வழமைபோல் நிகழ்வு செய்யும் அதே இடத்தில் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள் இதனை அவதானித்த அருகில் உள்ள தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களும் வந்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.


நினைவேந்தல் இடம்பெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் பொலீசார் மற்றும் அரசபுலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்பவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments