படையினர் காவல்த்துறையினர் அடக்கு முறைக்கு மத்தியில் செஞ்சோலை நினைவு!

படையினர் காவல்த்துறையினர் அடக்கு முறைக்கு மத்தியில் செஞ்சோலை நினைவு!

செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறீலங்கா விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று ஆகும் கடந்த 14.08.2006 அன்று தலைமைத்துவ கற்றல் செயற்பாட்டிற்காக ஒன்று கூடிய மாணவிகள் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் விமானங்கள் தாக்குதல் நடத்தி 54 மாணவர்களை பலியெடுத்த நிகழ்வானது ஆண்டு தோறும் நினைவிற்கொள்ளப்பட்டு வருவது வழமை.
இந்த முறை புதிய அரசாங்கம் படையினரின் ஆக்கிரமிப்பிற்குள் மக்களை வைத்திருக்கும் நோக்கில் கொரோனாவை காரணம் காட்டி படையினர் மக்கள் மத்தியில் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
செஞ்சோலை நினைவு நிகழ்விலை செய்வதற்கு அதன் ஏற்பாட்டுகுழு தீர்மானித்த போதும் அதனை செய்யவேண்டாம் என பொலீசார் ஏற்பாட்டுக்குழுவின் வீடுகளுக்கு சென்றும் தொலைபேசி ஊடாகவும் அச்சுறுத்தப்பட்ட நிலையில்.
இன்று காலை 6.15 மணிக்கு செஞ்சோலை விமானத்தாக்குதல் நடந்த வளாகத்தில் உயிரிழந்த மாணவிகளின் உறவினர்களால் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 6.45 மணிக்கு உயிரிழந்த மாணவிகளின் உறவினர்கள் ஏற்பாட்டுக்குழுவினர் சென்று சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
இந்த நிகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் தேவிபுரம் இடைக்கட்டு வீதியில் உள்ள செஞ்சோலை வளைவில் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வு செய்யும் இடத்திற்கு ஆயுதம் தாங்கிய படையினர் பிரசன்னமாகியுள்ளதுடன் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உறவினர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments