பணிப்புறக்கணிப்பால் வீழ்ச்சியடையும் நேர்வேயின் பெட்ரோலிய ஏற்றுமதி! தலையிடும் அரசு!!

You are currently viewing பணிப்புறக்கணிப்பால் வீழ்ச்சியடையும்  நேர்வேயின் பெட்ரோலிய ஏற்றுமதி! தலையிடும் அரசு!!

நோர்வேயின் பெற்றோலிய உற்பத்தித்துறையில் பணியாற்று ம் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் குதித்து வருவதால், நோர்வேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் பாரிய சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கும், நிர்வாகங்களுக்குமிடையில் சுமுகமான இணக்கப்பாடு ஏற்படாதவிடத்து, அரசு அதில் தலையிடுமென, நோர்வேயின் தொழிற்துறை அமைச்சர் “Marte Mjøs Persen” எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பாவுக்கான இயற்கை எரிவாயுத்தேவையின் நான்கில் ஒரு பகுதியை நோர்வே ஏற்றுமதி செய்து வந்த நிலையில், உக்ரைன் நிலைமைகளை காரணம் காட்டி, ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்வதை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதால், அந்தப்பங்கையும் சேர்த்தே நோர்வே இப்போது ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெட்ரோலிய உற்பத்தி பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பினால் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திகளும் கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளன. 05.07.22 முதல் ஆரம்பக்கட்டமாக 76 பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், சுமுகமான இணக்கப்பாடொன்று ஏற்படத்தைவிடத்து, எதிர்வரும் 09.07.22 சனிக்கிழமைமுதல் மேலும் பல பணியாளர்கள் கட்டம் கட்டமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்களென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பணிப்புறக்கணிப்பு தொடருமானால், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி வருமானத்தில் நாளொன்றுக்கு சுமார் 1.826 பில்லியன் குறோணர்கள் வருமானத்தை நோர்வே இழக்குமெனவும், நோர்வேயின் ஏற்றுமதி 56 சதவிகிதம் வரையிலான வீழ்ச்சியையும் சந்திக்குமெனவும் கணக்கீடுகள் காட்டுகின்றன.

இந்நிலையில், ரஷ்ய பெற்றோலிய மற்றும் எரிவாயு இறக்குமதிகளுக்கு ஐரோப்பா தடை விதித்துள்ளதால், தடை விதித்துள்ள நாடுகளின் பெற்றோலிய மற்றும் எரிவாயு தேவைகளை நோர்வேயே அதிகளவில் ஈடுசெய்துவரும் நிலையில், ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டால் முழு ஐரோப்பவுமே பற்றாக்குறையால் பாதிப்படையும் நிலை வருவதை தடுக்கவே அரசு மேற்படி விடயத்தில் தலையிடுமென எச்சரிப்பதாக நோர்வேயின் தொழிற்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments