பதவியிலிருந்து விக்னேஸ்வரன் திடீர் விலகல்..!

பதவியிலிருந்து விக்னேஸ்வரன் திடீர் விலகல்..!

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து க.வி.விக்னேஸ்வரன் விலகியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையை ஒரு வெகுஜன அமைப்பாகவும்- பரந்தபட்ட அமைப்பாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் மாற்றும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையை மீள வலுப்படுத்தவும், மீளவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை உள்ளெடுக்கவும் இந்த முடிவை விக்னேஸ்வரன் எடுத்துள்ளார்.

விக்னேஸ்வரன் மட்டுமல்லாமல், கடந்த தேர்தலில் ஏதாவதொரு கட்சியுடன் தம்மை அடையாளப்படுத்திய பேரவையின் ஏனைய உறுப்பினர்களும் பதவிவிலகவுள்ளனர். இன்னொரு இணைத்தலைவரான வசந்தராசாவும் பதவி விலகவுள்ளார்.

தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் இணைய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் தான் இன்று காலையில் பேசியதாகவும், தமிழ் மக்கள் பேரவையை கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்காகவே இவ்வாறுதான் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய தேசிய ரீதியான பிரச்சினைகள் உருவாகும் போது தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களை ஒன்றிணைத்துச் செயற்படுவதற்கான சூழல் இதன்மூலமாக ஏற்படுத்தப்படும் என்பதால்தான் இவ்வாறான முடிவைத் தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments