பதவி துறக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ!

You are currently viewing பதவி துறக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ!

தென்னிலங்கை மக்களின் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையடுத்து தலைமறைவாகியுள்ள இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ, எதிர்வரும் 13 ஆம் நாள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச செய்தியூடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தவறான பொருளாதாரக்கொள்கைகள் உள்ளிட்ட பல விடயங்களால் பொருளாதார ரீதியில் கடும் இழிநிலைக்கு இலங்கை சென்றுள்ள நிலையில், அதிபர், பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு தென்னிலங்கை மக்கள் கடந்த பலமாதங்களாக நடத்திவரும் அரசுக்கெதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், 09.09.22 அன்று பொதுமக்கள் அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து தலைமறைவாகியுள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ மறைவு நிலையில் இருந்தபடியே மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments