பதவி விலகும் ஒஸ்லோ மாநகரசபை நிர்வாகம்!

You are currently viewing பதவி விலகும் ஒஸ்லோ மாநகரசபை நிர்வாகம்!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் மாநகரசபை நிர்வாகம் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மேம்பாடு விரைவில்…

செய்தி மேம்பாடு:

தற்போது ஒஸ்லோ மாநகர நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் கூட்டுக்கட்சிகளில் ஒன்றான பசுமைக்கட்சியின் உறுப்பினரான “Lan Maria Nyguan” மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் மாநகரசபை நிர்வாகத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் பிரேரணை பெரும்பான்மை வாக்குக்களை பெற்றதால், மாநகரசபை நிர்வாகம் பொறுப்பிலிருந்து விலகுவதாக மாநகரசபை தலைவர் “Raymond Johansen” அறிவித்துள்ளார்.

ஒஸ்லோ மாநகரத்தை உலகின் முதலாவது பசுமை நகரமாக மாற்றிக்காட்டுவதாக சவால் விடுத்து மாநகரசபையில் இடம்பிடித்த பசுமைக்கட்சியின் செயற்பாடுகள் மக்களிடையே பெரும் விசனங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒஸ்லோ நகருக்குள் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் வருவதை முற்றாக தடை செய்யும் அக்கட்சியின் செயற்பாட்டு திட்டத்தை நிறைவேற்றும் படிமுறைகளின்போது, பொதுமக்களுக்கான அசௌகரியங்களை கருத்திலெடுக்காமை, இது விடயத்தில் மக்கள் எதிர்கொண்டுவரும் அனாவசிய பொருளாதார செலவுகள், மிதிவண்டிகளுக்கான பாதைகளை அமைக்கும்போது, பொதுவான வாகனப்போக்குவரத்துக்கான வீதிகளின் அகலத்தை சுருக்கியமை, நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டமை, பின்னர் பெரும் பொருட்ச்செலவில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மிகுந்த அதிருப்தியடைந்திருந்த அதேவேளை, பொதுமக்களின் வரிப்பணம் முறையற்ற விதங்களில் அனாவசியமாக செலவாகுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒஸ்லோ மாநகருக்கான குடிநீர் விநியோக மேம்பாட்டுக்கான செலவுத்திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மேலதிக செலவீனம் தொடர்பில் பசுமைக்கட்சியின் “Lan Maria Nyguan” மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதாலேயே இப்போது ஒட்டுமொத்த மாநகரசபை நிர்வாகமும் தூக்கி எறியப்பட்டுள்ளது.

புதிய மாநகரசபை நிர்வாகமொன்று அமைக்கப்படும்வரையும் தற்போதுள்ள நிர்வாகம் பொறுப்பிலிருக்கும் என்றாலும், அதி அவசரமான விடயங்களை தவிர, வேறெந்த அரசியல் முடிவுகளையும் தற்போதைய நிர்வாகம் எடுக்க முடியாதெனவும் சொல்லப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments