பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான வைத்தியர் விடுவிக்கப்படுவாரா?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான வைத்தியர் விடுவிக்கப்படுவாரா?

பளை வைத்தியசாலையில் வைத்தியர் சின்னையா சிவரூபன், “பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தில்”, கடந்த வருடம் ஆகஸ்ட் 18 அன்று இலங்கை இராணுவத்தால் கொடூரமான அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவர் இரவு வைத்தியசாலை கடமைக்கு வந்துகொண்டிருந்த போது ஆனையிறவு சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினத்துடன் அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையில் தற்போது வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கிடைத்த ஒரு தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து விசாரணையின் போது அவரிடம் கிடைத்ததாக கூறப்படும் “தகவல்களின்” படி, சின்னமணி கனேஷ்வரன், ரத்தினம் கிருஷ்ணராசா, மோகனசுந்தரம் சின்னதுறை, வினாயகமூர்த்தி நெஜிலன், ரி. நிமல்ராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பளை கரந்தாய் பகுதியில் ஒரு பெரிய அளவிலான வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆழிவலை கடலின் பாறைகள் மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் அடங்கிய மற்றொரு பொதியை கடற்படை கண்டு பிடித்துள்ளததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

சட்ட வைத்திய அதிகாரி சிவரூபனை கைது செய்யத பின்னர், அவருக்கு எதிராக மிகவும் துஸ்டத்தனமான ஒரு பிரச்சாரத்தை முதலாளித்துவ ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்டன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமாரும் தற்போதைய இலங்கையின் ஜனாதிபதியுமான கோடபய ராஜபக்ஷவை படுகொலை செய்ய ஒரு திட்டம் இருப்பதாக அவர் ஒப்புதல் வாக்குமூம் கொடுத்துள்ளார் என்ற ஒரு புணை கதையை ஊடகங்கள் வேண்டுமென்றே வெளியிட்டன. கோடாபய ராபக்ஷவை கொல்வதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்பு திட்டமிட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு சிவரூபன் கேட்டுக்கொண்டதாக சிலோன் டுடே பத்திரிகை குறிப்பிட்டது.

அத்தகைய ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை சிவரூபன் அல்லது கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்களோ கொடுக்கவில்லை என்றும் அதை முற்றிலும் நிராகரிப்பதாகவும் கடந்த வருடம் ஆகஸ்ட் வியாழக்கிழமை (29 திகதி) பொலிஸ் பேச்சாளர் அறிவித்தார்.

சிவரூபன் 2009 மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையுடன் முடிவுக்கு வந்த பிரவினவாத புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு ஒரு சாட்சியாக இருந்தார் என கடந்த வருடம் ஆகஸ்ட் 20 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீதரனின் தெரிவித்தார்.

“2009-2010 யுத்தம் முடிந்த காலப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இராணுவ, பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, விபத்தில் இறந்ததாக தெரிவித்து அந்த விதத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவரூபன், இதில் பல மரணங்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளன, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன, நவீன முறைகளைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளன என்ற விடயங்களை வெளிக்கொண்டு வந்ததுடன் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தினார். அவர் இரண்டு முறை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமும் அளித்துள்ளார்,” என ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

சிவரூபன் கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள், கடந்த வருடம் ஆகஸ்ட் 20 அன்று பளை ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்தியரை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மீண்டும் ஆகஸ்ட் 22 அன்று, பொது மக்கள் ஒரு ஊர்வலத்தை நடத்தி, சிவரூபனை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு ஒரு மஹஜரையும் அனுப்பி வைத்தனர்

மருத்துவர் சிவரூபனிடம் சிகிச்சைப் பெறவதற்காக பளைப் பிரதேச மக்கள் மட்டுமன்றி, வடமாராட்சி கிழக்கு உடுத்துறை, மருதங்கேணி, தாழையடி போன்ற தூரப் பிரதேச கிராமங்களில் இருந்தும் நோயாளர்கள் வருகின்றனர் இவ்வாறான மனிதநேயம் உடைய மருத்துவரின் விடுதலைக்காக பல கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏங்கிகொண்டு உள்ளார்கள்

தற்போது, வைத்தியசாலையின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியரே சேவையில் இருக்கின்றார்கள். சீவரூபன் இல்லாத காரணத்தினால் நோயாளர்களில் ஒரு பகுதியினர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments