பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் ஒஸ்லோவில் 16 வயது இளைஞர் கைது!

Default_featured_image

பயங்கரவாத நடவடிக்கையொன்றுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டாரென்ற சந்தேகத்தில் சிரிய பின்னணியைக்கொண்ட 16 வயது இளைஞன் ஒருவரை ஒஸ்லோ காவல்துறை கைது செய்துள்ளது.

குறித்த இளைஞரை பின்தொடர்ந்து தகவல்களை சேகரித்த காவல்துறையின் கைது வளையத்தில் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவர் விளக்க மறியலுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

தன்மீதான குற்றச்சாட்டை மறுதலித்தருக்கும் இளைஞர், அவரது வயது காரணமாக விளக்கமறியலில் வைப்பதை எதிர்ப்பதாக அவரது நோர்வே சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள