பயணிகளோடு வெடித்து சிதறிய விமானம்!

You are currently viewing பயணிகளோடு வெடித்து சிதறிய விமானம்!

திடீரென ஏற்பட்ட விமான விபத்தைத் தொடர்ந்து சவுத்எண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

Beech B200 என்ற 40 அடி நீளமுள்ள சிறிய ரக விமானம், லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்றுள்ளது.

இந்நிலையில் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து 175 அடி உயரத்தில் வெடித்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

12 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய குறித்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

எசெக்ஸ் பொலிஸார், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் அனைத்தும் சம்பவ இடத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

பகிர்ந்துகொள்ள

Leave a Reply