பயண தடை நீக்கப்பட்ட முதல் நாளில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் பலி!

You are currently viewing பயண தடை நீக்கப்பட்ட முதல் நாளில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் பலி!

இலங்கையில் ஒரு மாத காலமாக அமுல் செய்யப்பட்டிருந்த பயணத் தடை நேற்று நீக்கப்பட்டு 24 மணி நேரங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் குறைந்தது 8 பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணத் தடை தளர்வுக்கு முந்தைய நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் நேற்று உயிரிழந்த நிலையில் நேற்று பதிவான விபத்து மரணங்கள் 11 ஆக உயர்ந்துள்ளன.

பலியானவர்களில் 6 பேர் மோட்டர் சைக்கிள் ஒட்டுநர்களாவர். அத்துடன், பாதசாரிகள் இருவர் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்கள் ஆகியோரும் விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments