பயத்தினால் பதுங்கவில்லை! மார்தட்டும் அமெரிக்க அதிபர்!!

பயத்தினால் பதுங்கவில்லை! மார்தட்டும் அமெரிக்க அதிபர்!!

அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்கியதால், கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளைமாளிகையில் அமைந்திருக்கும் நிலக்கீழ் பதுங்கறைக்கு அதிபர் டிரம்ப் கொண்டு செல்லப்பட்டிருந்தார் என் முன்னதாக “AP” செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான விளக்கத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

போராட்டக்காரர்களால் ஆபத்து வரலாமென்ற பயத்தினால் தான் நிலக்கீழ் பதுங்கறைக்கு செல்லவில்லையென மறுத்திருக்கும் டிரம்ப், என்றோ ஒரு நாள் அந்த நிலக்கீழ் பதுங்கறைக்கு தான் செல்லவேண்டி வரலாமென்ற எண்ணத்தினால், அந்த நிலக்கீழ் பதுங்கறையை பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றிருந்ததாகவும், மிகக்குறுகிய நேரமே அறையில் தன நின்றிருந்ததாகவும் தெரிவித்திருக்கும் அவர், தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லையெனவும் தெரிவித்திருக்கிறார்.

4.5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments