பயிற்சி ஆசிரியர் செஞ்சுடர் அவர்களின் அன்னை காலமானார்!!

You are currently viewing பயிற்சி ஆசிரியர் செஞ்சுடர் அவர்களின் அன்னை காலமானார்!!

2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட வடபோர்முனை போர்ப்பயிற்சி ஆசிரியர் செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகி அம்மா அவர்கள், புற்றுநோய் தாக்கம் காரணமாக 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவடைந்துள்ளார். சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகவை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தேடியலைந்து மகன் பற்றிய நம்பகமான சேதி அறியாமலும், நீதி மறுக்கப்பட்ட நிலையிலும் இறைபதம் எய்த தாயாருக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர் தமது இரங்கல் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு, தாயாரின் குடும்பத்தினரது துயரிலும் இரண்டறக் கலந்து கொள்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments