பரபரப்புக்களுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அதிபர் “ட்ரம்ப்”!

பரபரப்புக்களுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அதிபர் “ட்ரம்ப்”!

மிகுந்த பரபரப்புக்களுக்கும்எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியில் அமெரிக்க மக்களுக்கு அதிபர்டொனால்ட் ட்ரம்ப்” உரையாற்றினார்மிகவும் மந்த நிலையிலேயே உரையாற்றிய அவர்தம்மால்படுகொலை செய்யப்பட்ட ஈரானிய இராணுவத்தளபதி “காஸிம் சுலைமானி” மீதுகுற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன்அவரை படுகொலை செய்தமையை நியாயப்படுத்தினார்.

நேற்றைய தாக்குதல்களில் அமெரிக்கர்கள் எவரும் கொல்லப்படவில்லை என தெரிவித்த அவர்வேறு நாடுகளை சேர்ந்த கூட்டுப்படை வீரர்கள் யாராவது உயிரிழந்தார்களா என எதையும்தெரிவிக்கவில்லைஇதேவேளைநேற்றைய ஈரானின் தாக்குதல்களுக்குள்ளான அமெரிக்ககூட்டுப்படைத்தளங்களில் நோர்வே இராணுவத்தினரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரையிலும் அணுவாயுத தொழினுட்பத்தை ஈரான்பெற்றுக்கொள்வதற்கு அனுபதிக்கப்போவதில்லை எனக்குறிப்பிட்ட ட்ரம்ப்அணுத்தொழினுட்பம்தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் நாடுகள்அவ்வொப்பந்தத்தைமீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரான் மத்தியகிழக்கில் தொடர்ந்தும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய ட்ரம்ப்ஈரான்மீது பொருளாதாரத்தடைகளை கடுமையாக விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்ஈரான் தனது போக்கை மாற்றிக்கொள்ள்வேண்டும் எனவும் தெரிவித்த அவர்நேற்றைய ஈரானின்தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுமா என்பது பற்றி கருத்துக்கள் எதையும்தெரிவிக்கவில்லை.

முன்னதாகஈரானின் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் பதிலடி கொடுக்கப்படுமென சூளுரைத்த ட்ரம்ப்பதில் தாக்குதல்கள் பற்றி எதுவும் தெரிவிக்காதமையானதுஆபத்தான நிலைமையைதணிப்பதற்கான அவசியத்தை அவர் உணர்ந்திருப்பதை காட்டுவதாக அவதானிகள்தெரிவித்துள்ளனர்.

அதிபர் டரம்ப்பின் இன்றைய உரையானது ஈரானுக்கும்அமெரிக்காவிற்குமிடையில் உடனடியானபோரொன்று இப்போதைக்கு ஏற்படாதென்ற கருந்தை சர்வதேசத்திற்கு சொல்லியிருப்பதாககருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments