பரிதாபங்கள்…
தியாகத்தின் உச்சம்
திலீபம்
மாறி மாறி ஆளும்
அடக்குமுறையாளரின்
அண்டிப்பிழைக்கும்
அரசியலுக்குள்
அகப்பட்டு
பரிதாபத்திற்குரிய
இனமாக
போய்விடாதீர்களென
அன்றே
விளித்தார்!
அது
கடந்த
16 ஆண்டுகளில்
இதய இடுக்குகளில்
நெருஞ்சியாய்
தைக்கிறது!
தெருக்களில்
கிடந்து
அடிக்கும் காற்றின்
பக்கம்
சருகுகளாய்
உருள்வதும்
இனத்தை
அழிக்க
வாளின் முனையாய்
நின்றவனின்
காலைத்தடவுவதுமாய்
காலவதியாகிய
உணவுப்பண்டங்களாய்
நாறி மணக்கிறது!
திலீபத்தின்
அரசியல் வீச்சை
அவரின்
தமிழின விடியலின்
பேச்சை
ஆழமாக புரியாதவனும்
நுணிப்புல்லு
மேய்ந்தவனும்தான்
அணில்ப்பிள்ளையாய்
கொப்புத்தாவுறான்!
சூனியங்களாகவும்
தங்களை
மனித மகான்களாகவும்
காட்ட
முனைகிறார்!
இனத்தின்
இருப்பிற்கான
விடுதலையையும்
வீழ்ந்த வீரரின்
ஆழமான
சிந்தனையும்
கொண்டவன்
சில்லறையாய்
சிதறமாட்டான்!!
✍️தூயவன்






