பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கோரோனா!

பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கோரோனா!

பருத்தித்துறை ஓடக்கரையில் ஒரே குடும்பைத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் தங்கியிருந்து வீடு திரும்பிய குடும்பத்தில் 34 வயதுடைய குடும்பத் தலைவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம்(03) உறுதிப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் (மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் மாமி) தொடர்ந்து சுயதனிமைப்பட்டனர்.

அவர்களிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது குடும்பத் தலைவி, அவரது தாயார் மற்றும் பிள்ளைக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுசெய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள