பருத்தித்துறையில் குழு மோதலால் பதற்றம்!

You are currently viewing பருத்தித்துறையில் குழு மோதலால் பதற்றம்!

பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் நேற்று இரவு குழு மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கிராமங்களிலிருந்து பெருமளவானவர்கள் அழைத்து வரப்பட்டு தமது பகுதி வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளான மக்கள் தெரிவித்துள்ளனர்.

வன்முறை கட்டுமீறிச் சென்றமையால் பருத்தித்துறை பொலிஸாருக்கு துணையாக நெல்லியடி சிறீலங்கா காவல்த்துறையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட வீடுகளுக்கு நெருக்கமான வீட்டில் இருந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் சிறீலங்கா காவல்த்துறையால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments