பருத்தித்துறையில் 12 பேருக்கு தொற்று உறுதி

பருத்தித்துறையில் 12 பேருக்கு தொற்று உறுதி

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த ஆசிரியையின் குடும்பம் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக தொடர்பில் இருந்துவந்த மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பருத்தித்துறை முனை கோரியடி பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்று திரும்பியவர்களில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிருசுவிலில் வங்கி உத்தியோகத்தருடன் தொடர்புடைய குடும்பத்தினருக்கு கடந்த தினத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் பருத்தித்துறை முனை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள