பருத்தித்துறை- புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருன்றனர்.






