பலத்த காற்றினால் முல்லைத்தீவு கிளிநொச்சியில் வீடுகள் சேதம்!!

You are currently viewing பலத்த காற்றினால் முல்லைத்தீவு கிளிநொச்சியில் வீடுகள் சேதம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதனால் 9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தற்போதுள்ள சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 7 வீடுகளும், கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு வீடுகளும் இவ்வாறு காற்றினால் சேதமடைந்துள்ளதாகவும், அதனால் 9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளிலும் 05 நிரந்தர வீடுகளும் 13 தற்காலிக வீடுகளுமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இலிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 06 தற்காலிக வீடுகளும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 05 தற்காலிக வீடுகளும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 01 தற்காலிக வீடுகளும் 02 நிரந்தர வீடுகளும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 02 நிரந்தர வீடுகளும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு தற்காலிக வீடும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு நிரந்தர வீடுமாக மொத்தமாக 18 வீடுகளே இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 18 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மாவட்டத்தின் பல இடங்களில் வீசிய கடும் காற்றினால் மரங்கள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments