பலியானோர் எண்ணிக்கை 827 ஆக உயர்வு : இத்தாலி

பலியானோர் எண்ணிக்கை 827 ஆக உயர்வு : இத்தாலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190-க்கும் அதிகமானவர்கள்  கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர். 10,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவித்துள்ளார்.  இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments