பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது! – மாணவர்களின் உண்ணாவிரதம் வெற்றி!

You are currently viewing பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது! – மாணவர்களின் உண்ணாவிரதம் வெற்றி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அழிக்கப்பட்டமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு, நடவடிக்கைகளை எடுப்பதாக துணைவேந்தர் சிறிசற்குணராஜா உறுதியளித்துள்ளார்.உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை இன்று அதிகாலை 3 மணியளவில் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.இதையடுத்து மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு சம்மதித்தனர்.

இதையடுத்து இன்று காலை துணைவேந்தர் முன்னிலையில் கடும் மழைக்கு மத்தியில் மாணவர்களால் நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள