பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவன் முல்லைத்தீவில் பரிதாபமாக பலி!

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவன் முல்லைத்தீவில் பரிதாபமாக பலி!

முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (24) என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் முகாமைத்துவ பீடத்துக்கு பேராதெனிய பல்கலைக்கழகத்து தெரிவான மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!