பல்கலைக்கழக மாணவியுடன காதல் காவல்துறையினன் தற்கொலை!

பல்கலைக்கழக மாணவியுடன காதல் காவல்துறையினன் தற்கொலை!

கடமை அறையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சவச்சாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சட்ட அதிகாரி இன்மை காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறை நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் 21 வயது மதிக்கத்தக்க புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை(19) மாலை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

புலனாய்வு உத்தியோகத்தர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழிபெயர்ப்பு பாடநெறியை தொடரும் மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் குறித்த மாணவியின் நெறி தவறிய போக்கினால் தான் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை காவல்துறை மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments