பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் பலாத்காரம்!!

பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் பலாத்காரம்!!

வட தமிழீழம், வவுனியா பட்டக்காடு பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தின்போது, மாணவி கூக்குரலிட்டதையடுத்து, அயலவர்கள் ஒன்று கூடி, வீட்டு உரிமையாளரான 51 வயதுடைய நபரை அடித்து துவைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

பட்டக்காடு பள்ளிவாசலுக்கு அருகில் வசித்துவரும் 51 வயதுடைய வாடகை வீட்டின் உரிமையாளர் பல்கலைக்கழத்தில் பயின்றுவரும் மாணவி ஒருவரை கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது பிறிதொரு வீட்டில் வாடகைக்குத் தங்கவைத்துள்ளார் .

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த மாணவி தங்கியிருந்த அறைக்குள் சென்று மாணவி மீது துஷ்பிரயோக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்துள்ளார் .

சம்பவம் இடம்பெறவுள்ளதை உணர்ந்து கொண்டு மாணவி சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அயலவர்கள் அங்கு சென்று மாணவியை காப்பாற்றியதுடன்,

வீட்டு உரிமையாளரை நையப்புடைத்து, அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

குறித்த நபர் அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வருகின்றார் . கடந்த மூன்று மாதங்களாக பல்கலைக்கழக மாணவி ஒருவரை தனது மற்றைய வீட்டில் தங்கவைத்துள்ளார். அவர் இரண்டு மனைவிகள் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments