பல்லாண்டுகளாக சட்டவிரோதமாக நோர்வேயில் தங்கியிருபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு முடிவு!

பல்லாண்டுகளாக சட்டவிரோதமாக நோர்வேயில் தங்கியிருபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு முடிவு!

பல வருடங்களாக நோர்வேயில் அனுமதி இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இல்லாமலும் மறைந்து வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களுக்கு வதிவிட அனுமதியும் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த பல வருடங்களாக முறையான அனுமதியோ, ஆவணங்களோ இல்லாமல் நோர்வேயில் மறைந்து வாழ்ந்துவந்த “எரித்திரியா” நாட்டு பின்னணியைக்கொண்ட பெண் ஒருவருக்கு, நோர்வீஜிய மதகுரு ஒருவர் அடைக்கலம் கொடுத்து, குறித்த பெண்மணிக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கி வந்ததமை கண்டறியப்பட்டது.

முறையான வதிவிட அனுமதியோ, அல்லது தொழில் புரிவதற்கான அனுமதியோ இல்லாத ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படி குற்றமாதலால், குறித்த மதகுருமீது சட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு குறைந்த பட்சமான தண்டனை வழங்கப்பட்டது.

இது விடயம் தொடர்பாக எழுந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்து, அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக 16 வருடங்களுக்கும் மேலாக, எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் நோர்வேயில் தங்கியிருப்பவர்கள் தங்களுக்கான முறையானவதிவிட அனுமதியை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், 2021 ஆம் ஆண்டுக்குள் விண்ணப்பங்களை முன்வைக்கவேண்டும் என்பதோடு, விண்ணப்பிப்பவர்கள் நோர்வேயில் ஆகக்குறைந்தது 16 ஆண்டுகள் இருந்திருக்கவேண்டும் என்பதும், விண்ணப்பிப்பவரது வயதும், நோர்வேயில் வாழ்ந்த 16 வருடகாலப்பகுதியும் சேர்த்து, 2021 ஆம் ஆண்டில்  குறைந்தது 65 ஆகவும் இருக்கவேண்டும் என்பதும் விதிகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு இப்பொதுமன்னிப்பு பொருந்தாது எனவும் அரசு குறிப்பிடுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments