பளை சிறீலங்கா காவல்த்துறை அத்துமீறி நுழைந்து அடாவடி!

பளை சிறீலங்கா காவல்த்துறை அத்துமீறி நுழைந்து அடாவடி!

வடமராட்சி கிழக்கில் உடுத்துறையில் பெண்ணொருவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் புகுந்து பளை சிறீலங்கா காவல்த்துறையினர் அடாவடி. .

நேற்று ஏன் கஜேந்திரகுமாரை மருதன்கேணி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாய்.

மருதன்கேணி வைத்தியசாலையை கொறோனோ சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னணியுடன் இணைந்து போராட்டம் நடாத்தப் போகிறாயா.

ஆர்ப்பாட்டம் நடத்தினால் உன்னைக் கைதுசெய்வோம் என மிரட்டியுள்ளனர்.

மேலும் கட்சி செயற்பாட்டாளர் இரத்தினசிங்கம் முரளி வீட்டிற்குச் சென்ற பளை சிறீலங்கா காவல்த்துறையினர் அங்கு அவர் இல்லாத நிலையில் அவரையும் கைதுசெய்வோம் என தொலைபேசியூடாக மிரட்டியுள்ளனர்.

இதை அறிந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர்.

இதேவேளை தமது மருதங்கேணி பிரதேச மருத்துவமனைக்கு ஒரு பொறுப்பு மருத்துவ அதிகாரி உட்பட இரண்டு மேலதிக மருத்துவர்களும் ஒரு பல் மருத்துவரும் கடமை ஆற்ற வேண்டிய நிலையில், தற்போது ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி ஒருவரே கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஆண், பெண் மகப்பேற்று விடுதிகள் இயங்காது இருப்பதாகவும், வெளிநோயாளர் பிரிவு கூட ஒழுங்காக இயங்காத நிலையில் கொரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பது தமக்கு வேதனை அளிப்பதாக மருதங்கேணி பிரதேச மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தமக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தராத சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம், தற்போது வெளிநோயாளர் சிகிச்சையை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்து, இன்றைய தினம் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க முன் வந்திருந்தனர்.

இதனால் காவல்த்துறையினர் குவிக்கப்பட்டு, வீதியால் சென்ற அனைவரும் பரிசோதிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டும் பலர் அனுப்பி வைக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் மருத்துவமனையின் அபிவிருத்திக்குழு சேவைப் பொருளாலருமான வேலுப்பிள்ளை பிரசாந்தன், “மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா மருத்துவ நிலையம் அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. மருதங்கேணி பிரதேச மருத்துவமனை சாதாரன மக்களுக்கான வழமையான சிகிச்சை நிலையமாக தொடர்ந்தும் இயங்க வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மக்களின் எதிர்ப்பையும் மீறி

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

பளை சிறீலங்கா காவல்த்துறை அத்துமீறி நுழைந்து அடாவடி! 1
பளை சிறீலங்கா காவல்த்துறை அத்துமீறி நுழைந்து அடாவடி! 2
பகிர்ந்துகொள்ள