பளை தம்பகாமத்தில் இளைஞன் வெட்டி கொலை!

பளை தம்பகாமத்தில் இளைஞன் வெட்டி கொலை!

கிளிநொச்சி – பளை தம்பகாமம் பகுதியில் இளைஞன் ஒருவன் இனந்தொியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

கொலை செய்யப்பட்ட இளைஞனின் கழுத்து, முகம், கை, கால் என சகல இடங்களிலும் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளது. 

தம்பலகாம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் குறித்த குரூர சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் மாமுனையை சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் என்பரே கொல்லப்பட்டுள்ளார். 

சடலம் தற்போது பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

பகிர்ந்துகொள்ள