பள்ளி ஆரம்பம் ஒத்திவைப்பு ; ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா தொற்று!

பள்ளி ஆரம்பம் ஒத்திவைப்பு ; ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் உள்ள “Nordvet” பள்ளி, இன்று திட்டமிடப்பட்டிருந்த பள்ளியின் தொடக்கத்தை ஒத்திவைத்துள்ளது. பள்ளியில் இரண்டு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது பள்ளியில் மூன்று மாணவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளி தனது இணையதளத்தில் எழுதியுள்ளது.

“ஒரு விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய திகதியை திட்டமிடுவதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனவே பள்ளியை மீண்டும் தொடங்க, மே 4 திங்கள் வரை காத்திருக்க வேண்டும்” என்று பள்ளியின் இணையதளத்தில் பள்ளியில் முதல்வர் “Katrine Sølvberg” எழுதியுள்ளார்.

தொற்று கண்டறிதலை மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகளுடன் பள்ளி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் மாவட்டத்தில் உள்ள தொற்று குழுக்களால் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் இணையதளத்தில் மேலும் எழுதியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments